கண்காட்டும் நுதலானும் - தேவாரம் | Kankaattum Nuthalaanum - Thevaram | Palan Tharum Pathikangal
HTML-код
- Опубликовано: 17 апр 2025
- Kankaattum Nuthalaanum - Devara Pathigam | Album : Palan Tharum Pathigangal | Singer : Bombay Saradha | Rendered : Thirugnanasambandar | Music : Veeramani Kannan | Amutham Music
கண்காட்டும் நுதலானும் - தேவார பதிகம் | இசைத்தொகுப்பு : பலன் தரும் பதிகங்கள் | குரலிசை : பாம்பே சாரதா | அருளியவர் : திருஞானசம்பந்தர் | இசை : வீரமணி கண்ணன் | அமுதம் மியூசிக்
பாடல்வரிகள் :
குழந்தை செல்வம் பெற்றிடவே ஈசனை வணங்கிடுவோம்
திருவெண்காடு திருப்பெண்ணாகடம் நாளும் சென்றிடுவோம்
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே
மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதிஇரவி
எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே
விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே
வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே
தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே
சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே
பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே
கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்(று)
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர்பிறிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்திருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே
தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே
திருஞானசம்பந்த சம்பந்தர் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார்.
திருஞானசம்பந்தர் நாயனாரின் அற்புதங்கள் (பெரியபுரணம் வழி)
ஞானப்பால் உண்டமை ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டு நிறையப் பெற்ற பின்னர் ஒரு நாள் காலை தந்தையாருடன் சீர்காழி திருகோயிலின் திருக்குளத்திற்குச் சென்றார். சிவபாத இருதயர் மைந்தனைக் கரையில் அமரச்செய்து நீருள் முழ்கி அகமருடஜெபம் செய்தார்.
தந்தையைக் காணாமையாலும், முன்னைத்தவம் தலைக்கூடியதாலும் திருத்தோணிச்சிகரம் பார்த்து “அம்மே! அப்பா!” என்று அழைத்தருளி அழுதருளினார். அப்பொழுது, திருத்தோணிபுரபெருமான் உமா தேவியாரோடும் விடைமீதமர்ந்து காட்சி கொடுத்தார். உவமையிலாக் கலை ஞானமும் உணர்வரிய மெய்ஞானமும் கலந்த திருமுலைப்பால் ஊட்டுவாயாக எனப்பெருமான் பணித்தார். அப்படியே பெருமாட்டியும் எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி உண் அடிசில் என ஊட்டினார். ஞானம் உண்ட பிள்ளையார் சிவஞானச்செல்வராய்த் திகழ்ந்தார்.
எண்ணரிய சிவஞானத்
தின்ன முதங்குழைத் தருளி
உண்ணடிசில் எனஊட்ட
உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக்
கையிற்பொற் கிண்ணமளித்
தண்ணலைஅங் கழுகைதீர்த்
தங்கண்ணார் அருள்புரிந்தார்.
For Music Streming & Downloads
Apple Music : / palan-tharum-pathikangal
Spotyfy : open.spotify.c...
Amazon Prine Music : music.amazon.i...
Jiosavan : www.jiosaavn.c...
Wynk Music : wynk.in/music/...
Google Play Store : play.google.co...
For More Videos: / amuthammusic
Facebook : / amuthammusicofficial
#Palantharumpthiganagal#osarun#bombaysaradha
Amuthammusic#dailyprayers#lordsiva#thevaram
அப்பாவின் பாடல் கேட்டு என் மகள் கர்ப்பமாக இருக்கிறார் நன்றி அப்பா சிவாய நமக
என் மனைவிக்கு இந்த மாதம் கரு தங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் வேண்டும் இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
என் மகளுக்கு குழ்ந்தைச்செல்வம் கிடைக்க அருள்புரிய வேண்டுகிறேன் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
வேண்டுவோர் வேண்டாதவர்கள்
அனைவருக்கும்
ஈசன் குழந்தைச்
செல்வம் தர வேண்டுமாய் பிரார்த்திக்கிறோம்.
ஓம் நமசிவாய
சிவாய நம ஓம்.🙏🙏🙏
🙏
சிவபெருமானே எனக்கும் குழந்தை வரும் கொடுங்கள்என்ன போல தவிக்க எல்லாம் பெண்களுக்கும் குழந்தை வரும்
ஆமா அண்ணா
அப்பாவின் பாடல் 48 கேட்டு என் மகள் கர்பமாக இருக்கிறல் நன்றி அப்பா
This song 48 days ah?
@@divyats07yes definitely
😊
🙏🎉
Epdi kekanum ma. 48 days viratham erukanuma?
😢😢😢😢😢puthiranaga neeye pirakanum appa
Intha matham enaku kulanthai varam kodu appla unnai tha vendukirom🙏🙏🙏
குழந்தை பாக்கியம் வேண்டி தவம் கிடக்கும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் அருளும் இறைவா🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
நன்றி நண்பரே😊
என் மகள் அஸ்வினிக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு இறைவனை வேண்டி நிற்கிறேன் குழந்தை பாக்கியம் தரும் அப்பா ஓம் நமசிவாய.
மகளுககு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியுங்கள் ஐயனே
எம்பெருமானை ஈசனே பிள்ளைக்காக வரம் வேண்டி கையேந்தி நிற்கும் குழந்தைகள் அனைவருக்கும் பிள்ளை பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டும்🎉🎉🎉
ஐயனே என் மகளுக்கு சீக்கிரமே குழந்தை பாக்கியம் கிட்ட வரம் அருள வேண்டும் 🙏🙏🙏
என் இரண்டு கருவும் நன்கு வளர்ச்சி அடைய வேண்டும். ஓம் நமசிவாய
நிச்சயமாக சகோதரி
God bless you
God bless you
அக்கா குழந்தை கிடைச்சிட்டா
குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? நீங்கள் நலமா?
இந்த மாதம் எனக்கு கரு தங்க வேண்டும் 💐🙏🏻குழந்தை வரம் தந்திடு ஐயனே 💐🙏🏻ஓம் நமசிவாய 💐🙏🏻அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள் 💐🙏🏻
அப்பா நாங்கள் அனைவரும் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் நீங்க நிச்சயமாக குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் தருவீங்க தந்தையே என் ஈசா
உன் சரண் விடாது பற்றி பாடுகிறேன். மெய்க்கண்டானை என் கருவில் பொருத்தி, திருஞான சம்பந்தனை போன்ற அறிவும், ஞானமும் கொண்ட மகவை அருளாய் ஈசா 🌹
ஓம் நமசிவாய ❤
எல்லா பிள்ளைகளுக்கும் குழந்தை பாக்கியம் கிட்டும்
இந்த பதிகம் படிச்சுட்டு இருக்கேன் தினமும், எனக்கு குழந்தை இந்த மாதம் தங்க வேண்டும்
48 நாள்
இப்பாடல், கர்ப்பரட்சாம்பிகை முல்லை வனம் நிற்கும் பாடல் மற்றும் முருகப் பெருமகனின் செகமாயை பாடலை
இந்த மூன்று பாடலை பக்தியுடனும் நம்பிக்கைையுடனும் பாடுங்கள். நல்லதே நடக்கும்.
Nanum ithann pandrenn sister...
🙏🏻
குழந்தைக்காக உங்களிடம் மணி ஏந்துகிறேன் அப்பா. எனக்கும் என் கணவருக்கும் நல்ல உடல்நலனை தந்து நீ தான் குழந்தை பாக்கியம் தர வேண்டும் அப்பா.
மனதில் நம்பிக்கை இல்லை ஆனால் உன்னையே நம்புகிறேன் காப்பாற்றும் அப்பா 😢😢😢😢😢
இம்மாதம் ஏணக்கு கரு தங்க வேண்டும் அப்பா .... ஓம் நமசிவாய...
My daughter will get pregnant this month pray for her
ஓம் நமசிவாய பாடலை கேட்டு பயன் கிட்டும் 🎉🎉
அப்பா உன்னை வேண்டி நிற்கிறேன் இந்த மாதம் எனக்கு கரு நிற்கணும் அப்பா நீத எனக்கு துணையாக இருக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் பெண் அம்முக்கு சீக்கிரம் குழந்தை வரம் தர வேண்டும் ஈசனே எம்பெருமானே கருணை காட்டுங்கள் 👏👏🤲🤲
கண்டிப்பா கொழந்த பாக்கியம் எல்லாருக்கும் எம்பெரும்மள் தருவர் ஓம் நமசிவய,,,🙏🙏🙏🙏😭💯
என் கணவரும் நானும் பிரிந்து இருக்கிறோம் அப்பா எங்களை சேர்த்து வைத்து எங்களுக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் எம்பெருமானே.... மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு பெருமானே
மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து விட்டது நன்றி ஐயா ஈசனே ஓம் நமசிவாய 🙏🙏🙏👍
வாழ்த்துக்கள்
குழந்தைகாக ஏங்கி கொண்டு இருக்கோம் எங்களுக்கு புத்திர பாக்கியத்த கொடுங்க அய்யா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சிவ அருளால்
Trichy thayumanavar arulal you will conceive baby soon
அய்யன் அருள் கிடைக்கும் ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் போற்றி 🙇🏻🙇🏻🙇🏻 அம்பாள் அருளால் 😊
L
Om namah shivaya now I m praganant in 2 months
இன்னும் 5நாளில் முதல் scan போக போகின்றேன்,.. அப்பா என் குழந்தைகளுக்கு இதயதுடிப்பு வந்திருக்க வேண்டும் அப்பா...
உங்கள் எல்லாருக்கும் கண்டிப்பா குழந்தை செல்வம் கிடைக்கும்..... எல்லாம் வல்ல ஆண்டவர் நமது கனவை நிறைவேற்றுவார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அம்மா..
Thankyou very much enonnukku Karu thanka vendum APPA
நன்றி🙏🏻
Thanks ma
Thank you
🕉️🙏அப்பா எனக்கு இந்த மாதம் குழந்தை தங்கி இருக்க நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் அப்பா 🕉️🙏🙏🙏🙏
அப்பா இந்த மாதமே எனக்கு கரு உருவாகனும் அப்பா
எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியுங்கள் 🙏
Excellent music and excellent singing. I also pray for my son to get child , for my Grand son. Om Namah Sivaya.
இந்த மாதம் என் pregnancy test positive varanum ஐயா,அருள் புரியும்
என்ன மாதிரி கஷ்ட படுற எல்லாருக்கும் சீக்கிரம் குழந்தை பாக்கியம் குடுங்க அப்பா
எல்லாம் உள்ளம் ஈசன் அம்பாள் அருளால் கிடைக்கும் ❤
எங்கமகளுக்கும்மருமருமகனுக்கும் புத்திரபேறுகொடுங்கஜயா
Sivan appa unga ponnukku intha masam thalli ponum appa ungala tha appa nambi iruken unga ponnuku help pannunga appa please appa 🙏🙏🙏🙏🙏🙏
Om namasivaya ☘️
குழந்தை பாக்கியம் கொடுங்கள் இறைவா🙏
சர்வேஸ்வரா திருவெண்காடு பதிகமே எனக்கு புத்திர பாக்கியத்தை கொடு சாமி சர்வேசா எனக்கு ஒரு புத்திர பாக்கியத்தை கூட யார் ஒரு கருநான் சுமக்கனும்
Appa en akka virkum kulanthai varam kodungal appa 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
Appa ungala nambi iruken rompa aasaiya iruken innaiyoda 30 days mudinchiduchi neengatha koodave irunthu enakku arulanum appa positive aganum appa enna kashta paduthathinga appa Ungala Kenji kekkuren appa🙏🙏🙏🙏☘️☘️☘️🥺🥺🥺🥺 appa 47 days achu positive aga vainga please please please please please appa
எல்லோருக்கும் குழநதை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா முருகா முருகா
Om namasivaya...nal thalli poiruku appa ne enaku aan varisu koduthitanu namburen..en nambikaiya poorthiseium appane
அப்பா எனக்கு இந்த மாதம் கரு தங்க வேணும்
நிச்சயமாக கவலை வேண்டாம்
நல்லதே நடக்கும் கவலை வேண்டாம் மகளே
Appa enakum intha matham karu thanganum 🙏🙏🙏
மகள் இந்த மாதம் கர்ப்பம் ஆக வேண்டும் ஐயனே அருள் புரியுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏
Inthe pathigam nanum padikiren enaku inthe matham kulanthai uruvaga vendum arul puryungal iraivaaa
🙏🙏🙏🙏🙏🙏nandri theivamay
குழந்தைச் செல்வம் எங்களுக்கும் வேண்டும் வரம் அருள் வேண்டும்
அப்பா உன்னை வேண்டி நிற்கிறேன் எனக்கு இந்தமாதம் கரு உண்டாகி பிள்ளைபேறு அடைய நீதா எனக்கு பக்க துணையாக இருக்க வேண்டும்
வரம் கிடைத்ததா மா
ஓம் நமசிவாய பாடலை கேட்டு பயன் கிட்டும் 🎉🎉🎉
எனக்கு பேரன் பிறக்கனும். மகனுக்கு திருமணம் ஆகியது
ஈசனே சிவகாமி அம்பாள் தாயே போற்றி நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும்
குழந்தைக்கு ஏங்கும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் தாயுமானவரே🙏 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏 ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க 🙏
ஓம் நமசிவாய🙏 சிவபெருமான் அருளால் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது நன்றி எம்பெருமானே எல்லோரும் நம்பிக்கையோடு இருங்கள் நல்லதே நடக்கும்
Congratulations sis 🎉❤
என்னை ஒரு பிச்சைக்காரியாக ஏற்று குழந்தை செல்வம் அருள வேண்டும் ஈசனே 🙏
கிடைத்ததா
🙏 ஓம் நமசிவாய!
எங்கள் வீட்டிலும் மழலைச் செல்வங்கள் கிடைக்க அருள்வாய் ஈசனே!
அய்யா என் மகனுக்கு மெய்கண்டார் போல்ஞானம் உள்ள குழந்தை வேண்டும் அய்யா..,. சிவாய நம
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 😢
இந்த மாதமே கர்ப்பம் ஆக வேண்டும் முருகா ஓமநமசிவாய
அனைவருக்கும் குழந்தை பேறு உண்டாகட்டும்
மகன் மருமகள் இருவருக்கும் குழந்தைக்கும் கிடைக்கும் புரியவேண்டும் சிவசிவ
Ohm shivaya nama ❤ muruga ❤
என் இரண்டு கருவும் நன்கு வளர்ச்சி அடைய வேண்டும் அப்பா ஓம் நமசிவாய 🙏🙏🙏
Enaku Intha matham Karu Thangi Namraga valara vendum Sivan’e
இம்மாதம் எனக்கு கரு தங்கவேண்டும் இறைவா ஒம் நமசிவாய
அப்பா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்கள் ஐயா 🙏🙏
Appa eswara ella மக்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் கூர்ந்து பார் அப்பா
எங்களது மகனுக்கு ஆண் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்
அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் உண்டாகா அருள் புரிவிர் அப்பா 🙏🙏🙏
அப்பா என் கரு நன்கு ஆரோக்கியத்துடன் வளர்ச்சி அடைய வேண்டும்... ஓம் நமச்சிவாய..
என்க்கு பேரன் பேத்திகள் பிறக்க அருள் புரிவீராக என் மகளின் வாழ்வை வளமாக்கு இறைவா எல்லோரும் மகிழ்வாக வாழ அருள்புரிவீராக ஓம் நமசிவாய மவ சிவ பல சிவ
அப்பா எனக்கு ஒரு குழந்தை வரம் தந்து அருள் புரிய வேண்டும்.,...🕉️🙏🙏🛐🕉️🙏🛐🕉️🙏🙏🛐🕉️🙏🛐
மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து விட்டது நன்றி முருகா ஓம் நமசிவாய 🙏👍
வாழ்த்துக்கள்
Congratulations 🎊 💐
அப்பா சிவனே என் வயற்றில் குழந்தை இருக்கனும் ஐயா ஓம் நமச்சிவாய
தெளிவாக பிரித்துபாடியுள்ளார். கேட்கும்போது அவரோடு இணையமுடிகிறது வாழ்க வளமுடன் வாழ்த்துக்களைத்
ஓம் நமச்சிவாய. அப்பா உலக. மக்களை நோயின்றி கடனிலிருந்தும் காத்தருள்வாய் ஐயனே. எங்கள் மூத்த. மருமகளுக்கு எந்த குறையுமின்றி வி.ரைவில் குழந்தை வரம் அருள்வாய் எம் பெ.ருமானே.❤❤❤❤❤
ஓம் நமசிவாய அப்பனே எனக்கும் குழந்தை வரம் வேண்டும் இந்த வருடமே 🕉️🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🕉️🕉️🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🕉️
நிச்சயமாக
எனக்கு இந்த மாதம் கரு தங்க வேண்டும் இறைவா
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏எனக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் அப்பனே உன்னை மனம் உருகி வேண்டுகிறேன் ஓம் நமச்சிவாய 🙏ஓம் நமச்சிவாய 🙏ஓம் நமச்சிவாய 🙏
Appa enaku intha matham positive result varanum Nala valaranum Nitha appa manasu vaikunum 🙏🙏🙏❤️❤️
Intha month pregnancy confirm aganum Muruga 😢 ellarum pray panuga 😢
En makan parthipanukum w/o nakayokasrikum entha matham ankulainthiyo pen kulainthiyo entha kuriyum uilamal enne 10mathathil Kai neraya kotukavantum appana om namasivaya en makan parthipanukum w/o nakayokasrikum malatu eara payarai neeki Amma appa enru kupita ankulainthiyaka uruinthalum penkulainthiyaka uruinthalum eni 10 mathathil arokiyamana kulainthiya thaivankal uruvaki kotukavantum appana entha ammavin korikoya neraivarikotuinkal appana om namasivaya sivaya namaka en makan parthipanukum w/o nakayokasrikum entha matham mekavum ethirparpotu urukirom appana om namasivaya sivaya namaka
இந்த மாதமே கர்ப்பம் ஆக வேண்டும் ஈசனே ஓம் நமசிவாய 🙏🙏🙏
அப்பா ஸ்வேதாரண்யேஸ்வரா பிரம்ம வித்யாம்பிகை பிள்ளை இடுக்கி அம்மா என் மகளை கொஞ்சம் கண் திறந்து பாரம்மா தாயே
ஓம் நமசிவாய நமக சிவபெருமானே நா இந்த மாதம் பிரக்ஞன்ண்ட் ஆகணும் நா உன்னைத்தான்அப்பா. நம்பிருக்கேன் என்ன கைவிட்ராதீங்க எல்லாருக்கும் குழந்தை வரம் குடுங்க அப்பா நல்லதே நடக்கணும் 🤰🏼🤰🏼🤰🏼🤰🏼🤰🏼🤰🏼🤰🏼🤰🏼😭😭😭😭😭😭n🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️❤️❤️❤️ enappan eesan enna kaividala. Rompa. Nandri appa. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஈசனே என் கருவை ஏன் இப்படி செஞ்சங்க உங்கள் மேல நம்பிக்கை எனக்கு இருந்தது ஆனால் எனக்கு இப்படி ஒரு தண்டனையை ஏன் கொடுத்தங்க ஈசனே
9 ஆண்டு குழந்தை இல்லாத எனக்கு இந்த பதிகம் 48 நாட்கள் படித்த பிறகு பெண் குழந்தை பிறந்தது
48 டேஸ் எப்ப படிச்சீங்க மார்னிங் கொஞ்சம் சொல்லுங்க
Eve vilaku vachitu padichen non veg sapida kudathu
@@girijasuresh-jf2sq நீங்க 48 நாட்கள் படித்த பிறகு உங்களுக்கு எப்ப கன்ஃபார்ம் ஆச்சு ரொம்ப நாள் ஆச்சா இல்ல உடனே கன்ஃபார்ம் ஆயிடுச்சாம்
வாழ்த்துக்கள்
@@preethipreethi4396பாடலை எப்ப வேணும்னாலும் கேளுடா 🎉🎉 நம்பு மா ❤
என்னுடைய இரண்டு கருவும் நன்கு வளர வேண்டும். உங்கள் துணை கண்டிப்பா வேண்டும் ஐயா.
என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஈசனை வேண்டுகிறேன் என் மருமகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஈசனை வேண்டுகிறேன்
Ohm shivaya nama 😇 🙏
அப்பா இந்த மாதம் எனக்கு கரு தங்க வேண்டும் 🙏🙏🙏🙏
Swamy Om Namashivaya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஓம் நமசிவாய 🙏🙏🙏
பாடும் நயம் ரொம்ப அருமை ஓம் நமச்சிவாய நமோ 🙏🙏🙏🙏🙏
குழந்தை செல்வம் குடுத்தாயேஇந்தமாதம்நல்லசெய்திகுடுதாயேநல்லரிசல்ட்வரனும்தாயே🙏🙏🙏🙏🙏🙏😂😂😂
ஐயா சுவாதாரனேஸ்வரா பிள்ளை இடுக்கி அம்மா தாயே பிரம்மபுத்யாம்பிகை என் மகளுக்கு இந்த வருஷம் குழந்தை தங்கிய ஆகணும் அம்மா
குழந்தைக்காக ஏங்கி கொண்டு இருக்கிறோம் நீங்கள்தான் அருள்புரியவேண்டும் சிவனே நீங்கள்தான் அருள்புரியவேண்டும் சிவனே போற்றி போற்றி
ஈசனே சிவகாமி அம்பாள் தாயே போற்றி நீங்கள் தான் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அம்மா
என்னை மாதிரி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் ஏக்கம் மிகவும் கொடுமையானது..😢சிவபெருமானே குழந்தைகாக ஏங்கி தவிக்கும் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என் அப்பனே..ஓம் நமச்சிவாய....
, ஃ எனது மகள் மருமகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன்
Ohm gum ganapathiyea namaha 😇 ohm shivaya nama ❤
அருள்மிகு
வெண்காட்டுஇறைவனை
திருஞானசம்பந்தப்பெருமான்அருளிய
அருமையான
அருட்பதிகம்!!
இராமபிரான்
அருள்நீராடி
வழிபட்ட
தொன்மையான திருக்கோயில்!!
உலகிலேயே
முதன்மையானமெய்யுணர்
வாளர் மெய்கண்டார்
தோன்றுவதற்கு வரமருளிய
பதிகம்!!
பண்மொய்க்கும்இன்மொழியாள்சாரதா
குரலினிமை
மேலும்பெருமைசேர்க்கிறது!!
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏எனக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் அப்பனே,உன்னிடம் மனம் உருகி வேண்டுகிறேன்.🙏🙏🙏